ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தொழில்!




ஏ.ஆர்.ஏ.ஹஃபீஸ்-
ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோவின் புதல்வர் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன் கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டு கோளை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். 

ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடி நீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக் கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தொழில் வழங்கு வதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற் கொள்ளுமாறு பிரதித் தலைவர் சபீக் ரஜாப்தீன், நிறைவேற்றுப்பணிப்பாளர் மஹிலால் சில்வா ஆகியோர் முன்னிலையில் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சாரிடம் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -