இக்ர இஸ்லாமிய சங்கம்( IIC -Kuwait) ,
இஸ்லாமிய வழி காட்டி மையம் (IPC)
இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்த
தான நிகழ்வில் வெள்ளிக்கிழமை (13-
மார்ச் ) குவைத் ,மத்திய இரத்த வங்கியில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது .
இதில் கௌரவத்துக்குரிய குவைத்
இலங்கை தூதுவர் என் .எம் .அனஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ,இக்ர
இஸ்லாமிய சங்க தலைவர் அஷ் ஷேய்க் எம் .ஐ .எம் மன்ஸூர் அவர்கள் உற்பட
நிருவாக சபை அங்கத்தவர்கள் மற்றும் இஸ்லாமிய
வழி காட்டி மையத்தின் தாயிக்களான
அஷ் ஷேய்க் ஹுஸைன் ,அஷ் ஷேய்க்
பைஸல் ,அஷ் ஷேய்க் நளீம் ,அஷ் ஷேய்க் ஜாபர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட
குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் .
குவைத்தில் நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும்
எமதே சகோதர ,சகோதரி களுக்காக இரத்தம் தேவைப் பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே இரத்தம் தேவைப்படும்போது கொடுப்பதற்கான ஏற்பாடுகளை இக்ரஃ இஸ்லாமிய
சங்கம் (IIC
Kuwait ) முன்பிருந்தே செய்து கொண்டு வந்துள்ளது .
இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் இக்ர இஸ்லாமிய சங்கமும் ( IIC -Kuwait)
, இஸ்லாமிய வழி காட்டி மையமும் (IPC)
தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)