ஒலுவில் துறைமுகத்திற்கு 'கொரிய தூதுக்குழு' விஜயம்!

லைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பெரும்திட்டங்களில் ஒன்றான ஒலுவில் துறைமுகத்தின் மூலமான முழுப் பயனை மக்கள் பெறுவதிலுள்ள தடைகளை நீக்கி அதனை முழப்பயன்பாட்டுக்கு உட்படுத்துவதில் வேகமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அவற்றில் பிரதானமாக ஏனைய துறைமுகங்களிலுள்ளது போன்று பலமான அலைகளினால் குவிக்கப்படும் மணல்மேடுகளை உடனுக்குடன் வெளியேற்றும் முறைமைகள்(Sea sand  pumping system இங்கு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இதனை நிவர்த்தி செய்வதனூடாக துறைமுகம் பெரு வருமானத்தினை ஈட்டுவது மட்டுமன்றி இப்பிரதேசத்தின் துரித வளர்ச்சியினையும் கருத்திற்கொண்டு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் அழைப்பின் பேரில் இத்துறைசார் கொரிய சிறீலங்கா கூட்டு நிறுவனமான 'கோசன் சிறிலக்'தனியார் நிறுவனத்தின்(kosen Srilak private limited) பணிப்பாளர்  Dao Jo Lee மற்றும் கொரிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிதியான Kang  உள்ளிட்ட குழவினர் அனில் பீரிசின் தலைமையில் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் செய்து செயற்திட்டத்துக்கு ஏதுவான காரணிகளை அவதானித்தனர். 

இதன் போதுதுறைமுகத்தின் தற்போதைய நிர்வாக முகாமையாளர் ஜனாப்.எம்.ஏ. கபீர் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பளீல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அகியோருடன் செயற்திட்டம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டதுடன் மீன் பதனிடல் மற்றும் ஏற்றுமதி சார் தமது விருப்பினையும் தெரியப்படுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் துறைமுக அமைச்சர் மற்றும் துறைமுக அதிகார சபை என்பவற்றுடன் இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.


இதன் போது எமக்கு கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பளீல் அவர்கள் நல்லாட்சியின் மளர்ச்சியினது பிற்பாடு நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு எற்பட்டுள்ளதாகவும்,தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பெரும்திட்டங்களின் வெற்றி அனைத்து மக்களுக்கும் சென்றடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், இவ்விடயம் சம்பந்தமாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் றவூப் ஹக்கீம்;, கிழக்கு முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஷ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் மற்றும் ஏனைய MPக்கள், பிராந்திய மக்கள் பிரதிநிதிகள், துறைசார் வல்லுனர்கள் உள்ளிட்டவர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த போவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -