இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்-அமைச்சர் துரைராஜசிங்கம்

ஏஎம் றிகாஸ்-

தேசிய அரசாங்கத்தின் இருப்பு வடக்கு கிழக்கிலே சுயநிர்ணய உரிமையுள்ள ஒரு பிரதேசத்தை உருவாக்குகின்ற ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யுமென கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தோடு பாராளுமன்றம் கலைந்துவிடாது 2016 வரை இந்த அரசாங்கம் சென்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும் என்பது தனது அபிப்பிராயம் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு - வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு இறுதிநாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிபர் திருமதி எஸ்ஆர் உதயகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்- 

தேசிய அரசாங்கம் இருந்தால் மட்டும்தான் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படும். நான் விரும்புவது இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தோடு பாராளுமன்றம் கலைந்துவிடாது 2016 வரை இந்த அரசாங்கம் சென்றாலும் கூட நல்லாதாகத்தான் அமையும். இந்த இனப்பிரச்சினைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொள்ளுகிறோம்; என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ; கூறியிருக்கிறது.

இந்த தேசிய அரசாங்கத்தின் இருப்பு வட கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களது சுய நிர்ணய உரிமையுள்ள ஒரு பிரதேசத்தை உருவாக்குகின்ற ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும.; அப்பொழுதுதான், ஆகுதிகளாகிவிட்ட எமது அருமை சகோதரர்களுடைய கனவுகள் பலிக்கும் அந்த கனவுகள் பலிக்கின்றபோது நாங்களும் ஒரு சிறந்த ஈழ மணித்திருநாட்டிலே எல்லோரும் இந்த நாட்டினுடைய மக்கள் என்கின்ற வரைவிலக்கத்திலே தமிழர், இஸ்லாமியர், சிங்களவர், பறங்கியர் என்கின்ற வேற்றுமையின்றி எல்லோரும் ஓர் இனம், ஓரே குலம் இந்நாட்டின் குடி மக்கள் என்ற சம உரிமையுடன் வாழலாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -