அபூ-இன்ஷாப்-
புதிய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பினி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ள போஷாக்கு உணவு தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு விள்க்கும் செயலமர்வு நேற்று (12) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ.அல்வீஸ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட கல்முனை மற்றும் அம்பாறை பிராந்தியங்களுக்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் ,குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.