பழுலுல்லாஹ் பர்ஹான்-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் செய்த முறைப்பாட்டை தான் வரவேற்பதாகவும், அதற்காக நன்றி கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் வினவிய போதே அவர் மேற் கண்ட வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
கடந்த 25 வருடங்கலாக ஊழல் ஊழல் என்று இவர்கள் சொல்லி வந்தார்கள். அதை உடனடியாக கொடுக்குமாறு நான் ஒரு மாதத்திற்கு முன்பே வேண்டு கோள் விடுத்திருந்தேன்.
ஆகவே உடனடியாக தங்களிடம் இருந்த ஆவணங்களை ஒப்படைத்து இருப்பதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன், நன்றி கூறுகின்றேன்.
மிக விரைவாக நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை சந்தித்து இந்த விடயத்தை உடனடியாக துரிதப்படுத்துமாறு வேண்டவுள்ளேன்.
நான் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எதிர் வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு இது தொடர்பான உண்மைத் தன்மையை உடனடியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என்று நான் மிக விரைவில் எனது சட்டத்தரணிகள் சகிதம் சென்று அவர்களிடத்தில் வேண்டு கோள் விடுக்க இருக்கின்றேன்.
ஏதாவது ஒரு சிறிய சதமாவது இலஞ்ச ஊழல் இருக்குமாக இருந்தால் அரசியலில் இருந்து நான் முற்று முழுதாக விலகுவேன். நாங்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.
நாங்கள் இலஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் இருப்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்காக, வேறு யாருக்குமாக இல்லை. எங்களை படைத்த இறைவனுக்கு பயந்துதான் இலஞ்சம் ஊழலில் ஈடு படாமல் இருக்கின்றோமே தவிர, வேறு யாருக்காகவும் இல்லை.
ஆகவே, இவர்கள் இவ்வாறு இன்று ஒப்படைத்துள்ள முறைப்பாட்டை யிட்டு சந்தோஷமடைகின்றேன், பாராட்டுகின்றேன். மிக விரைவில் நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு சென்று இது தொடர்பிலே விசாரித்து உடணடியாக இந்தத் தீர்ப்பை இது தொடர்பான உண்மைத் தன்மையை உடணடியாக வழங்குமாறு நான் கேட்க இருக்கின்றேன்.
அவர்களுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், சகல வசதிகளையும் செயற் படுத்தி, அவற்றையும் கொடுத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி மிக விரைவில் இவர்களுடைய கோரிக்கையை துரிதப்படுத்தி விசாரிக்குமாறு கேட்க இருக்கின்றேன் என சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
ஆகவே மிகத் தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஒரு சதமேனும் இலஞ்சம், ஊழல் என்று நீரூபிக்கப்பட்டால் அல்லது அது தொடர்பில் உன்மை இருந்தால் அரசியலில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கி விடுவேன் என்று இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்' என்று மேலும் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்.