ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்திலுள்ள வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலைய சாதாரனதர வகுப்பு மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலையில் பாடசாலையின் பிரதான நுளைவாயிலுக்கு முன்பாக பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் ஏ.ஏ.எம்.நளீர் ஆசிரியருக்கு எதிராக வகுப்பு பாடங்களை பகிஸ்த்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் சம்பந்தமாக நேரடியாக சென்று பார்வையிட்ட பொழுது, குறித்த பாடசாலையில் சாதாரன தரத்தில் கல்விகற்கும் மாணவனான ஏ.யு.எம்.இர்சாத் எனும் மாணவனை குறித்த ஆசிரியர் கடுமையாக தாக்கியதாகவும், மாணவனுடைய நண்பர்களக இருக்கின்ற சக மாணவர்களான பாசித், சியாம் ஆகியோரையும் தாக்கிய காரணத்தினாலே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும், குறித்த ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், நூரிய்யா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று பாடசலைக்கு சமூகமளித்து குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பாடசாலை அதிபர் எம்.யு.எம்.இஸ்மாயிலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். குறித்த ஆசிரியரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாகாத வார்த்தை பிரயோகங்களால் ஏசியதாகவும் அதனாலேயே ஆசிரியர் கோபமுற்று மாணவனை தாக்கியதாக கிடைக்கப்பெற்ற செய்தியினைப்பற்றி அதிபரிடம் கேட்ட பொழுது அது சம்பந்தமாக குறித்த ஆசிரியர் தன்னிடம் முறையிடவில்லை எனவும், மாணவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் எனக்கூறிய அதிபர் இஸ்மாயில், இது சம்பந்தமாக மட்டக்களப்பு கல்விவலயத்துக்கு அறிவித்தல் கொடுதுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இன்று பாடசாலைக்கு சமூகமளித்திராத குறித்த ஆரியர் ஏ.ஏ.எம்.நளீரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து இது சம்பந்தமாக வினவிய போது, குறித்த மாணவன் பாடசலையில் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து அடிக்கடி ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் இது சம்பந்தமாக பலதடவைகள் அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த வித நடவடிக்கைகளையும் பாடசாலை குறித்த மாணவனுக்கெதிராக மேற்கொள்ளவில்லை எனவும், தான் மாணவனை கடுமையாக தாக்கியது என்பது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு எனக்கூறிய குறித்த ஆசிரியர், இது பாடசாலையில் உள்ள ஆசிரியர்களாலும், வெளிநபர்களாலும் தனக்கெதிராக திட்டமிட்டு மாணவர்களை சட்டத்துக்கு முறனான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்படி தூண்டியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
த.நவோஜ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவர்களை ஆசிரியரொருவர் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி தரம் 11 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மாலை வேளையில் குறித்த பாடசாலையில் தரம் 11ல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் வீதியால் வரும் போது அப்பாடசாலையில் சுகாதரப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரின் முச்சக்கர வண்டி நின்றுள்ளது.
அந்த சமயம் முச்சக்கர வண்டியை கண்ட மாணவர்களில் ஒருவர் குறித்த ஆசிரியரின் பெயரை சொல்லி அவரது ஆட்டோ நிற்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
இது ஆசிரியருக்கு தனது பெயரைச் சொல்லி அவனது ஆட்டோ கிடக்கின்றது என்று விளங்கியதாகவும், இது தொடர்பாக வியாழக்கிழமை பாடசாலை நேரத்தில் குறித்த ஆசிரியர் மாணவர்களை விளங்கிய போதே தாக்கியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது நல்லதொரு தீர்மானம் எடுக்க வேண்டும், அசிங்க வார்த்தைகள் வகுப்பறையில் பிரயோகிக்கின்ற ஆசிரியரை நீக்கவும், எங்கள் பாடசாலையில் நளீர் ஆசிரியர் 11ம் தர மாணவனை கொலை செய்ய முயன்றதால் அவரை பாடசாலையில் இருந்து நீக்குக உபட்ட வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தயவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக குறித்த பாடசாலைக்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹீப் ஆகியோர் பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இச்சம்பவம் தொடர்பாக பாடசாலைக்கு வருகை தந்த பிறைந்துரைச்சேனை நூரியா ஜிம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் குறித்த மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட வைத்துடன், பள்ளிவாயல் நிருவாகத்துடனும், பாடசாலை நிருவாகத்துடனும் இச்சம்பவம் தொடர்பாக கலந்துரையாடினர்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் கருத்து தெரிவிக்கையில், இப்பாடசாலையில் சுகாதாரப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர் அவர்களுடன் கதைத்து ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், பாடசாலைக்கு சமூகமளித்திருந்த பெற்றோருடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையடுத்து அவர்களும் கலந்து சென்றனர்.
குறித்த பாடசாலையில் சுகாதாரப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எங்களது பாடசாலைக்கு வேண்டாமென்றும், அதற்குப் பதிலாக வேறொரு ஆசிரியரை நியமித்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் பிரதிக் கல்விப் பணப்பாளர் வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவக்கு கொண்டு வரப்பட்டது.