அஸ்ரப் ஏ சமத்-
இன்று காலிமுகத்திடலில் மகத்தாண வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமாண நிலையத்தில்; வைத்து இந்தியப் பிரதமரை வரவேற்றார்.
இவரின் வருகைக்காக கொழும்பில் மட்டும் 5000 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இந்திய இலங்கை தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் விஷேட உரை நிகழ்த்த உள்ளாh. அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்திப்பார். 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
27 வருடத்திற்குப் பிறகே இந்திய தலைவர் ஒருவர் உத்தியோக பூர்வமாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்த பிறகு மற்றும் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் இவரின் வருகை மிக சரித்திர பூர்வமானதொரு விடயமாக கருதப்படுகின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவரின் வருகை ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
இன்று பிற்பகல் வியாபார சமுகத்தையும் சந்தித்து பிரதமர் உரையாற்றுவார். நாளை அநுராதபுரத்திற்குச் சென்று அரச மரக்கிளையை பார்வையிட்டு ஆசிரிவாதத்திலும் ஈடுபடுவார். இம் அரச மரத்தினை இந்திய அசோக்க மண்ணர் காலத்தில் அவரது மகள் சங்கமித்தா இந்தியாவில் இருந்தே கொண்டுவந்து இவ் அரச மரத்தை உருவாக்கியதாக கூறப்படுகின்றது.
வடபகுதியில் மண்ணாரில் தலைமண்ணார் - மடு புகையிரத நிலையத்தையும் பிரதமர் ஆரம்பித்து வைப்பார். யாழ்ப்பாணத்தில் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தினையும் அவர் திறந்து வைப்பார். அத்துடன் கலச்சார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டுவார். அத்துடன் யாழ் நூலகத்தில் இந்திய கோணர் நூலக பிரிவினையும் ஆரம்பித்து வைப்பார்.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர், மலையக கட்சித் தலைவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டனி, முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதியின் இராப்போசனத்தில் கலந்து கொள்வார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.