இந்த நாட்டில் நல்லாட்சிக்காக அரசியல் தலைவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இதனை மழுங்கடிக்கும் விதத்தில் அரச அதிகாரிகள் செயற்படுவது பாரிய துரோக செயலன பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.ஏ.தாஜீதின் தெரிவித்தார்.
இன்று அரச வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண்கள் தமது கலாச்சார ஆடைகளை அணிந்து கடமையாற்றுவதற்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டையிட்டு வருவதாக வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் முறையிட்டனர்.
இது நல்லாட்சிக்கான பயனத்தை தடுப்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து தாக்குவதற்கு சிலர் முற்படுகின்றனர்.
இந்த செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.
இதற்காக வேண்டி முஸ்லிம்கள் ஆட்சி புரியும் உள்ளுராட்சி மன்றங்களில் இதற்கெதிரான பிரேரனை கொண்டு வரப்பட வேண்டும் என சகல முஸ்லிம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் உதவித் தவிசாளர் என்ற வகையில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.