வாழைச்சேனை போக்குவரத்துச் சாலையின் அவல நிலை கண்டு அதிர்ந்து போன ஊடகவியலாளர்-படங்கள்







த.நவோஜ்-

ருவர் தாம் தொழில் செய்யும் போது அத்தொழில் செய்யுமிடம் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவாக இருந்தால் தான் நிம்மதியாக தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும்;. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமலிருந்தால் அந்த இடத்தில் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அவ்வாறான சிரமங்களுக்கு முகங்கொடுத்து தொழில் செய்து வருபவர்கள் தான் இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலை ஊழியர்கள்.

போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையின் நிரந்தரக் கட்டடத்திற்காக கல்குடாத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான கே.டபிள்யூ.தேவநாயகத்தினால் 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 03ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு 1989ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முதல் தனியார் ஒருவரின் காணியில் தற்காலியமாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

1989ம் ஆண்டு திறக்கப்பட்ட இச்சாலையில் அன்று தொடக்கம் இன்று வரை எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை. மலசலகூட வசதிகளும் சரியான நிலையில் இல்லை. அத்துடன் நீர்த்தாங்கி பழுதடைந்த நிலையில், அதனால் தொடர்ந்தும் நீர்க்கசிவு ஏற்படுவதன் காரணமாக மீண்டும் மீண்டும் நீரை ஏற்றுவதால் மின்சாரம் விண் விரயமாகின்றது.

சாலையின் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் இல்லாததால் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை. வளாகத்தைச் சுற்றி மின் விளக்குகளுக்குறிய வசதிகள் இல்லாததால் இரவில் கடமைகள் புரியும் காவலாளிகளுக்கு பாம்புகளின் தொல்லையும், மழைக் காலம் வந்தால் நிம்மதியாக இருந்து கடமை செய்ய முடியாத சூழலும், எவ்வித வசதிகைளையும் கொண்ட ஓய்வு அறையில்லாமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமை புரிந்து வருகின்றனர்.

நூற்றியொரு (101) ஊழியர்கள் கடமை புரியும் இச்சாலையில் தற்போது இருபத்தைந்து பஸ்கள் உள்ளதுடன், அதிலும் இரண்டு பஸ்கள் பழுதடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டுமென இங்கு கடமை புரியும் ஊழியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் முகாமையாளர் எம்.ஐ.அஸீஸிடம் சாலையின் குறைபாடுகள் தொடர்பாக கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாழைச்சேனை சாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாததன் காரணமாக ஊழியர்கள் பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களையும் அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த காலத்தில் பல்வேறு அரசியல்வாதிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.

தற்போது புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் எங்களது சாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமென்ற நம்பிக்கையில் பிரதேச அரசியல்வாதிகளான வீடமைப்பு, சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.

இச்சாலையிலுள்ள குறைபாடுகள் புதிய அரசாங்கத்தில் நிவரத்தி செய்யப்படுமென்று சாலை ஊழியர்களும், நானும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் குறைபாடுகள் துரிதகதியில் நிவர்த்தி செய்யப்படுமா? என ஊழியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -