கிண்ணியா தோனா கடற்கரை மீன் சந்தையில் பாவனைக்கு உதவாத 150 கிலோவிற்கு அதிகமான மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த இந்த பெருந் தொகை மீன்களை கிண்ணியா வைத்திய சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.
கிண்ணியா வைத்திய சுகாதார அதிகாரிக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சுற்றி வளைப்பு மேற் கொள்ளப்பட்டு மீன்கள் கைப்பற்றப்பட்டதாக வைத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
பழுதான நிலையில் உள்ள மீன்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் புதிய மீன்களுக்கும் குறைந்த விலையிலேயே மக்கள் பேரம் பேசுவதாக தெரிவிக்கிப்படுகின்றது.
இதனால் புதிய மீன் விற்கும் வியாபாரிகளும் பாதிப்பை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.