இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காலி கடற்கரை ஓரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் அதிவேக படகு ஒன்று நடமாடியதை அவதானித்த பொலிசார் அந்தப் படகை அண்மித்த சமயம் படகு வேகமாக கடலுக்குள் சென்றுள்ளது. இதை பொலிசார் கடற்படைக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடற்படையின் உதவியால் அந்தப்படகினை இடைமறித்து சோதனையிட்ட வேளை அதற்குள் உணவுப்பொதிகள் , மதுபானங்கள் மற்றும் உடைகள் இருந்ததாகவும்
அந்நபரின் தொலைபேசியை எடுத்து பார்த்த போது கோத்தபாயவுடன் நிமிடங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடற்படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை விசாரணைக்கு உட்படுத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. என ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
தெரிவித்துள்ளது. கோத்தபாயவே தப்பிக்க இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் வெகு விரைவில் கோத்தபாய கைது செய்யப்படலாம் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.