யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை நூல் வெளியீடு!

அஸ்ரப் ஏ சமத்
யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை – நூல் 510 பக்கம் - 1500 ருபா பெறுமதியான நூல். நூல் வெளியீட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த 457 பேருக்கும் இந்நூல் முற்றாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. 

யாழ் முஸ்லீம்களது கல்வி, பண்பாடு இலக்கிய பங்களிப்பு தொழில் அரசியல் அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள். இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழும் நிலை, மீளவும் யாழ் செல்ல முடியுமா? எனும்; ஏக்கம். 21ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால யாழ்ப்பாணத்து முஸ்லீம்களின் நிலை முதலானவை தொடாபான வரலாற்றுப் பார்வையை இன்றுள்ள யாழ் முஸ்லீம்களும் எதிர்கால சந்ததியினரும் ஏனைய சகோதர மக்களும் அறிந்து கொள்ள கூடியவாறு இந் நூல் காலத்தின் தேவை கருதி ' யாழ் முஸ்லீம் வரலாற்றுப் பார்வை என்னும் இந் நூல் வெளிவந்துள்ளது.

இந் நூல் வெளியீட்டு வைபவம் யாழ் முஸ்லீம் மறுமலர்ச்சி இயக்கம் ஏற்பாடு செய்து இந் நூலை வெளியீட்டு வைத்தது. இந் நிகழ்வு ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் ஏ.எம் முஹ்தார் தலைமையில் நடை பெற்றது.

கடந்த ஞயிற்றுக்கிழமை தெஹிவளை எஸ்.டி ஜயசிங்க மண்டபத்தில் மக்கள் மண்டபம் நிறைந்திருக்க வெளியீட்டு வைக்கப்பட்டு வருகை தந்த சகலருக்கம் நூல் இலவசமாக வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நூல் பற்றிய உரையை பேரசிரியர் எம். எஸ் அனஸ் உரையாற்றினார். ஜாமிஆ நளீமியா கலாபீடத் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏம்.சுக்ரி, இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, நூல் பற்றியும் இம் மக்களது அவல நிலையும் தற்போது அவர்கள் கண்டுள்ள முன்னேற்றம் பற்றியும் உரையாற்றினார்கள். 

இந் நிகழ்வின் பேராசிரியர் அனஸ் உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் யாழ் மண்ணில் இருந்து விரட்டப்படும்போதும் மக்கள் கையில் 500 ருபா ஒரு சொப்பிங் பேக்கில் தனது உடுப்பையும் எடுத்துக் கொண்டு புத்தளம் பகுதிக்கு வந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் பரந்து பட்டு சர்வதேச மட்டத்தில் கல்வித்துறை வியாபாரத்துறை அரச துறைகளில் முன்னேறி இந்த 1500 ருபா புத்தகத்தையே இலவசமாக விநியோகிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளார்கள். என அனஸ் தெரிவித்தார்.

இந் நூலில் யாழ்ப்பண முஸ்லீம்களின் குடியேற்ற பரம்பல், யாழ் முஸ்லீம்களின் இறை இல்லங்கள், அகதிகளை அக மகிழ்வுடன் அரவனைத்தோருக்கு நன்றி, யாழ் கண்னீர் துடைக்கும் கவிதை விரல்கள், வைத்தியர்கள், வர்த்தகத்துறை யாழ்ப்பாண முஸ்லீம்கள், யாழில் கெடி கட்டிப் பறந்த தென்னிந்திய வர்த்தக முஸ்லீமகள், யாழ்ப்பாணத்தில் போரா மேமன்சமுகம், புதிய சோனகத்தெரு., விளையாட்டு, பல் துறை சாதனையாளர்கள், யாழ்ப்பாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றம், மறைந்த இளைப்பாரிய அரச உயர் பதவி வகித்த உத்தியோகத்தர்கள், போன்ற 39 தலைப்புக்களில் கலாச்சார கூறுகள், படங்கள், அறிஞர் அசீஸ் தொட்டு யாழ் அசீம் வரை இந் நூலில் பல்வேறு துறை சர்ந்தவர்களது விபரங்கள் அடங்கியுள்ளன.

நூல் வெளியீட்டு ஆசிரியர் குழாம், நூலுக்கு அனுசரனை வழங்கியோர்களுக்கும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந் நூலில் - யாழ் அஸீம் கவிதையிலிருந்து - பிறந்த மண்னை நினைக்கையில், மனம் சிட்டுக் குருவியாய் பறக்கிறது. உடல் பூரித்தொரு கனம் சிலிர்க்கிறது , நினைத்தால் இனிக்கும் நினைவுகள் நெஞ்சில், தெவிட்டா இன்பக் கனவுகள் மண்ணின் வாசனையோ.கருப்பட்டி போலினிக்கும் கறுத்தக் கொழும்பானும் தேனொழுகும் பலாப் பழமும் தேடி மனம் தவிக்கிறது. எனச் சொல்லிக் கொண்டே செல்கின்றது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -