கே.சீ.டீ.ஏ-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் மூன்றாம் கட்ட சிறு தொகை நிதி கையளிக்கப்பட்டது.
இந்நிதியினை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். A.L. அபுல்ஹசன் அவர்களிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உபதலைவர் ஜனாப். A.M.M. முர்ஸிதீன், பொருளாளர் ஜனாப். F.M. சிப்னாஸ் மற்றும் உறுப்பினர்களான ஜனாப். M.R.M. றினோஸ், ஜனாப். M.M. நிப்ராஸ் ஆகியோரினால் 2015.03.10 ஆந்திகதி செவ்வாய்க்கிழமை அதிபர் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.