உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை மீதான பொதுமக்களின் ஆலோசனை பெறல்
தேசிய இஸ்லாமிய அமைப்புகள் , துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற் பாட்டாளார்களை உள்வாங்கிய தேசிய ஆலோசனை மன்றமான தேசிய சூரா சபை “ உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை ” மீதான பொதுமக்களின் கருத்துக்களை வேண்டி நிற்கிறது.
தேசிய மட்டத்தில், பிராந்திய மட்டத்தில், குறிப்பிட்ட இனக்குழுவை அடிப்படையாக கொண்ட அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் குறித்த விடயம் தொடார்பாக பின்வரும் விடயப்பரப்புக்கு உட்பட்ட வகையில் தமது முன் மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.
* உத்தேசிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையின் சாதக பாதகங்கள்.
* சிறுபான்மை இனம், சிறுபான்மை கட்சிகளுக்கான உரிய பிரதிநிதித்துவம்.
* சிறுபான்மையினரின் அபிலாசைகளை உள்வாங்கும் வகையிலான தேசிய அரசியல் கட்சிகளை பலப்படுத்தல்.
* வீண் விரயம், சுரண்டல், ஊழல், முறை கேடுகள் மற்றும் வன்முறைகளை குறைத்து பங்கேற்பு பிரதி நிதித்துவத்தின் தரத்தை மேம்படுத்தல்.
* மக்களும்,மக்கள் பிரதி நிதிகளும்: பொறுப்புக் கூறல் மற்றும் சகவாழ்வை நோக்கிய சாதக தன்மைகள்.
கருத்துக்கள், முன் மொழிவுகள் உள்ளடக்கிய எழுத்து மூலமாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை ( 200 – 300 சொற்களுக்கு கூடாமல்), கீழ்காணும் முறைகளினூடாக 16-03-2015 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறல் வேண்டும்.
மின்னஞ்சல் மூலம் : psc@nationalshoora.com / பெக்ஸ் மூலம் : 011 - 2678850
மக்கள் கருத்துக்களையும், முன் மொழிவுகளையும் தேசிய சூரா சபை அரசியல் உப குழு பரீட்சித்து இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பாக அதனை முன்னெடுக்கும்.
மேலதிக தொடர்புகளுக்கு : 0766 270 470