சுலைமான் றாபி-
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கடந்த 2014 ம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (12) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி என்.யூ.எச்.எம். சித்தீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், கல்முனை வலையக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் இப்பாடசாலைக்கு ஆற்றிய சேவையினைக் கருத்திற் கொண்டு பாடசாலை சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.