ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
கொழும்பு-3, சென் அந்தனீஸ் மகளிர் மகாவித்தியாலயத்தின் பத்தாவது இஸ்லாமிய தின நிகழ்வு பாடசாலையில் அதிபர் அருட்சகோதரி சொனாலி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற இல்மா சர்வதேச பாடசாலையின் அதிபர் ஹனீயா கபூர் கலந்து கொண்டார்.
பொறுப்பாசிரியை திருமதி சீனத் காதரின் வழிகாட்டலில் இஸ்லாமிய தின நிகழ்வுகள் நடைபெற்றது. பிரதம அதிதி மற்றும் அதிபர் அருட்சகோதரி சொனாலி ஆகியோர்களினால் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.