பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை பாஹிம் ஜூவலரியின் தயாரிப்பில் பிரபல நாடக இயக்குணர் ஜீனாராஜின் (ஐ.எல்.ஏ.ஹூசைன்) நெறியாழ்கையில் கவிஞர் அல்லாமா இக்பால் கலைக்கழகம்; பெருமையுடன் வெளியிடவுள்ள மருதமுனையின் அழகியலை ஆவணப்படுத்திய 'கல்வியா?,காதலா?' திரைப்படம் தொடர்பாக ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று காலை (14-03-2015) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கவிஞர் அல்லாமா இக்பால் கலைக்கழகத்தின் தலைவரும்,உதவி இயக்குணருமான எம்.எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இயக்குணர் ஜீனாராஜ்,உதவி இயக்குணர் எம்.எம்.எம்.முபீன்,தயாரிப்பாளர் எஸ்.எல்.நழீம்,இசையமைப்பாளர் யு.ஜே.நாஸார், ஆகியோருடன் இத்திரைப்படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,ஏ.ஆர்.ஏ.சத்தார், எம்.ஐ.ஏ.பரீட்,எம்.ஏ.நஸீர், எம்.எச்..றபீக் ஆகியோர் இத்திரைப்படம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மருதமுனையின் கல்வி,கலை,இலக்கிய கலாசார விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கல்விக்கும் காதலுக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களை தெளிவுபடுத்தும் அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டள்ளது. இந்த ஊடக சந்திப்பில் மூத்த இளைய ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானம் தொழுகை, ஜனாஸா நல்லடக்கம், மார்க்க விளக்கம் பொன்ற விடையங்களுக்கே செலவு செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.எல்.நழீம் தெரிவித்தார்.