தேசிய நிறைவேற்று சபையில் பிளவேற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் முறையில் மாற்றம் செய்த பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை காரணமாகவே தேசிய நிறைவேற்று சபையில் பிளவ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நிறைவேற்று சபையின் அண்மைய கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்ட போது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், இறுதி தீர்மானத்திற்கு வர முடியாமல் போனதாக தெரியவருகிறது.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யாது, உறுதியளிக்கப்பட்டது போல், 100 நாள் முடியும் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஏனைய சில சிறிய கட்சிகளும் யோசனை முன்வைத்துள்ளன.
எனினும் அரசாங்கத்தை ஏற்படுத்த உதவியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும், ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் முறையை மாற்றிய பின்னர் தேர்தலை நடத்தலாம் எனவும் அதற்கு 100 நாட்கள் போதவில்லை எனில் தேவையான காலத்தை எடுத்து கொண்டு அதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
அநி