தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­திய பின்­னரே பொதுத்­தேர்­தல் நடத்த வேண்டும்- சுதந்­திர கட்சி

தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­திய பின்­னரே பொதுத்­தேர்­தலை நடாத்த வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சியின் தனித்­தீர்­மானம் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென தெரி­விக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னத்­திற்கு கடு­மை­யான கண்­ட­னத்­தையும் தெரி­வித்­துள்­ளது.

நடை­மு­றையில் இருக்­கின்ற விகி­தா­சார தேர்தல் முறை­மை­யு­ட­னேயே அடுத்த பொதுத்­தேர்­தலை நடத்­து­வ­தென ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்ள நிலையில் இது தொடர்பில் வின­வி­ய­போதே எதிர்க்­கட்சி தலை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­ன­ரு­மான நிமல் சிறி பால டி சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வதுதேசிய அர­சாங்கம் அமைத்­த­வுடன் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னரே முதலில் தேர்தல் முறை­மையில் மாற்றம் தேவை­யென கூறினர்.

தேசிய அரசில் நாம் அங்கம் வகிக்­கா­வி­டினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசிய அர­சுடன் உள்ளார். எனவே அவரின் கோரிக்­கை­க­ளுக்கு நாம் கட்­டுப்­ப­டு­வ­தாலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கார­ணத்­தாலும் அவரின் முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டு­கின்றோம். ஆரம்­பத்தில் அடுத்த பொதுத்­தேர்­தலின் முன்னர் தேர்தல் முறைமை மாற்­றப்­ப­டு­மென வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. நாமும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­து­கின்றோம்.

புதிய தேர்தல் முறை­மையில் எல்லை நிர்­ணயம் சரி­யாக செய்ய வேண்டும். எல்லை நிர்­ண­யங்­களை செய்து அதற்­க­மைய சிறு கட்­சி­க­ளையும் பாதிக்­காத வகை­யி­லேயே அடுத்த பொதுத்­தேர்­தலை நடாத்த வேண்டும்.

அதற்­கான கால அவ­காசம் உள்­ளது. ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி தமது தேவைக்­கேற்ப குழப்­பி­ய­டித்து ஏதோ ஒரு வகை­யி­லா­வது அதி­கா­ரத்­தினை கைப்­பற்ற திட்டம் தீட்­டு­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தனித்த தீர்­மா­னங்கள் அனை­வ­ரையும் பிர­தி­ப­லிக்­கு­மென கூற முடி­யாது.

அதேபோல் இத்­தீர்­மானம் ஐக்­கிய தேசிய கட்­சியின் தனித்த தீர்­மானம். இதில் அனை­வரும் கட்­டுப்­பட வேண்டும் என்ற தேவை­யில்லை. இவ்­வி­டயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் தீர்­மானம் எடுக்­கப்­படும். இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட குழு கூடுகின்றது.ஜனாதிபதி தலைமையில்எமதுகட்சி உறுப்பினர்கள் இவ்விடயம்தொடர்பில் கலந்தாலோசித்துதேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -