நெருக்கடியான நிலைக்குள் நாளை ஜனாதிபதி தலைமையில்அமைச்சரவை கூடுகிறது!

19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில்அமைச்சரவை கூடுகின்றது.

கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் முடிவு காணப்படாமல் கூட்டம் முடிந்திருந்தது.

இதையடுத்து நடந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்திலும் 19 ஆவது திருத்தம் தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சமயத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐ.தே.க உறுதியாக இருக்கிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கிறது. இதற்காக பல தனியான சந்திப்புக்களில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதனால் நாளைய அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவமுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -