காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா






பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கையில் மிகவும் பழமைவாந்த அறபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெற்றது.

ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் (ரியாழி) தலைமையில் இடம்பெற்ற இப் பட்டமளிப்பு விழாவில் அதிதிகளாக காத்தான்குடி ,மட்டக்களப்பு ஆகிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், காழி நீதி பதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),அஷ்ஷெய்க் எம்.ஐ.கபூர் (மதனி), ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் நிருவாக உறுப்பினர் மௌலவி பீ.எம்.எம்.ஹனீபா (ஆதம்லெப்பை), காத்தான்குடி மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம் லெப்பை (பலாஹி), ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்;,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்,ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளர் முஸ்தபா ,அல்மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்மாயில் உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள் 8பேர் மௌலவி பட்டமும் 6 பேர் ஹாபிழ் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு விஷேட உரையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.முர்ஷித் முழப்பர் (ஹூமைதி) நிகழ்த்தினார்.

மேற்படி மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி, பொத்துவில்,காவத்தமுனை,
காத்தான்குடி பாலமுனை,நிந்தவூர்,காங்கேயனோடை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -