ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு இறுதிநாள் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எம். முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன் அதிதிகளான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உறுப்பினர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மத்தி வலயக் கலவிப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உட்ளிட்ட அதிதிகள் வரவேற்பு, மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளையும் இவ்வருடத்திற்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட மர்வா இல்லத்துக்கு வெற்றிக் கிண்ணம் வழங்குவதையும் படங்களில் காணலாம்.