அப்துல் அஸீஸ்-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 13.03.2015 இன்று மட்டக்களப்பு சாhள்;ஸ் மண்டபத்தில் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களி;ன் தலைமையில் நிகழ்ந்தது. இந்நிகழ்வின் போது பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுபா சக்கரவர்த்தி தேவைநாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி. அருள்வாணி சுதர்சன் ஆகியோர்கள் கருத்துரைகள் வழங்கினர்.
சிறப்பு பட்டிமன்றத்தினை மட்/புனித மிக்கல் கல்லூரி மாணவர்களும், வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலை மாணவிகளும் விவாதித்தனர். அத்துடன் தேவை நாடும் மகளிர் அமைப்பினரின் வில்லுப்பாட்டும் இடம் பெற்றது.