ஆர்.குல்ஸான் ஏ.பி-
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் சிறந்த தலைமைத்துவம் மிகவும் அவசியமானது.அந்த வகையில் நீண்ட காலமாக பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வந்த தலைமைத்துவ வெற்றிடத்துக்கு சிறந்ததோர் முடிவு காணப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தலைமைத்துவம் என்பது பல பன்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும், சமூகத்துக்கும் தலைமை தாங்கக் கூடிய அனைத்து தகுதிகளும் நிறைந்த உதவித் தவிசாளர் ஏ.எம். தாஜீதினை தெரிவு செய்யப் படயிருப்பது பொத்துவில் மண்ணுக்கு கிடைத்த கௌரவமாகும்.
கட்சி கடந்த காலங்களில் தகுதியற்றவர்களை நியமித்ததன் காரணமாகவே பல் வேறு பட்ட நெறுக்குதலுக்குள் ஆளான விடயம் எல்லோருக்கும் தெரிந்ததே. கட்சியின் சிரேஷ்டம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டியதுடன். தலைமைத்துவ விசுவாசம், கல்வியறிவு, மொழியாற்றல், கட்சிப் போராளிகளுடனான நெருக்கம் என்பன இங்கு பார்க்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
கடந்த காலங்களில் தனது சொந்த நலனுக்காக எதிர் தரப்பு அமைச்சர்களுடன் நெருக்காமாக செயற்பட்டவர்களையும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவித்தவர்களையும் கட்சியின் தலைமைத்துவம் இனம் கண்டுள்ளதை நினைத்து போராளிகள் கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சை விடுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் கட்சி மாறுவதற்கு இருந்தவர்களை மைத்திரியின் வெற்றியால் தான் அது தடுக்கப்பட்டது.