முஹம்மட் ஜெலீல்-
சம்மாந்துறை மாவடிப்பள்ளி பாலம் தொடர்பாக அண்மையில் வெளிவந்த செய்திகளை பார்க்கும் போது மக்கள் நண்பன் அண்மையில் விடுத்துள்ள மிளகாய் சவால் தான் ஞாபகத்துக்கு வருகின்றது,
இந்த பாலத்தினை புணரமைப்பதற்கு மக்கள் நண்பன் எடுத்துள்ள முயற்சிகள் ஒரு போதும் வீண்போகவில்லை என்பதற்கான பலன் இன்று இப்பாலத்தினை புணரமைப்பதற்கு இலங்கை அரசு முன் வந்து தற் போது புணரமைபுக்கான வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்பாலத்தினை புணரமைப்பதற்கான முழு வேலைத்திட்டத்தினை அரசு W M B எனும் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது
இவ் நிறுவனம் இப்பாலத்தினை முற்று முழுதாக புணரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் ஒரு வருட கால எல்லையும் வழங்கியுள்ளது இப்பாலத்தின் நீளம் 63 மீற்றர், உயரம் தற்போதைய உள்ள பாலத்ததின் உயர அளவிலிருந்து நாங்கு அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளதாக W M B நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.