அஸ்ரப் ஏ சமத்-
சவுதி அரேபியா அரசாங்கம் இலங்கையில் உள்ள வட கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவுத் திட்டத்திற்காக அந்த நாட்டில் இருந்து அன்பளிப்பாக 730 மெற்றிக் தொன் பேரித்தம் பழங்களை இலங்கையில் உள்ள ஜக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கியது. இது வட கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இப் பேரித்தம் பழத்தின் பெருமதி 1.9 மில்லியன் அமேரிக்க டொலர்களாககும். இன்று கொழும்பில் உள்ள சவுதி அரேபியாவின் தூதுவர் அழுவலகத்தில் வைத்து சவுதித் தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை வதிவிட பிரதி நிதி இஸ்மாயில் ஓமரிடம் கையளித்தார்.
இப் பேரித்தம் பழங்கள் வட கிழக்கில் உள்ள 958 பாடசாலை மாணவர்களது சத்து உணவுத் திட்டத்திற்காக பகிர்ந்திளிக்கப்படும். என உலக உணவு பிரதிநிதி தெரிவித்தார்.