நிந்தவூர் மஸ்ஜிதுன் நூர் மக்தப் வகுப்பின் முதல்வருட பூர்த்தியும், மாணவர்கள் கௌரவிப்பும்...!

 சுலைமான் றாபி-

ஸ்லாத்தின் வெளிச்சத்தினை உலகிற்கு கொண்டு செல்லும் பொறுப்பில் சிறுவர்களையும் உள்ளடக்கி அவர்களை சிறந்த நல்லொழுக்கமுள்வர்களாக கொண்டு செல்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "மக்தப்" வகுப்பு நிந்தவூரிலும் இடம்பெறுகிறது.

அந்தவகையில் நிந்தவூர் மஸ்ஜிதுன் நூர் மக்தப் வகுப்பின் முதல்வருட பூர்த்தியும், மாணவர்கள் கௌரவிப்பும் இன்று (14) நிந்தவூர் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் கட்டிடத்தில் இடம் பெற்றது. மக்தப் பிரதிநிதி எஸ்.எம்.எம். றியாத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏ.ஏ.அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையுடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மக்தப் அபிவிருத்திக் குளுத் தலைவர் மௌலவி எம்.பௌசுதீன், மௌலவிகளான இஸ்மத் இம்றான், அப்துல் ஹாதி, யு.இஸ்ஹாக், எம்.ஏ.அமீர், எப்.ஏ.எம். அப்லல், மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அஸ்பர், மக்தப் பிரதிநிதி ஏ.இப்திகார் அஹமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் நிந்தவூர் மஸ்ஜிதுன் நூர் மக்தப் வகுப்பில் கல்விபயிலும் மாணவர்கள் அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -