ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது உறுவாக்கப்படுவதற்கு அதன் இஸ்தாபக தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களுக்கு தோளோடு தோள் நின்று கட்சியினை உறுவாக்குவதில் பெறும் பங்காற்றியவரும் கட்சியின் சின்னமான மரச் சின்னத்தையும், அதற்கான நிறத்தையும் தெரிவு செய்து கொடுத்ததுடன் அதன் முதலாவது தவிசாளருமாக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் அல்- ஹாஜ் சேகு இஸ்ஸதீன் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியவராக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கறைப்பற்று நகரிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இறக்காமம் ஊரில் அமைந்துள்ள மதீனா புரம் என்னும் மலை உச்சியில் வசிப்பிடம் அமைத்து நான் யார்? எதற்காக பிறந்தேன் இவ்வுலகில் எனும் கேள்விகளுக்கு விடை தேடியவராக தனிமையில் ஆண்மீக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்.
அவருடைய சொந்த வாழ்க்கையை பார்க்கும் போது யாழ்பாணத்தின் நைனா தீவினை பிறப்பிடமாக கொண்ட நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை என்ற பெண்மனியை திருமணம் முடித்துக்கொண்டதற்குப் பிற்பாடு நாதிறா என்று மாற்றம் செய்ததோடு கவிதா என செல்லமாக அழைத்து வருகின்றார்.
அதன் ஞாபகமாகவே தான் மலையில் உறங்கும் இல்லத்துக்கு கவிதாலையம் என்று பெயர் சூட்டியுமுள்ளார்.
துமணத்தின் பலனாக இவருக்கு அஸ்ஸுஹூர், அஸ்ஸியான், சேக் அப்துல் காதிர், மொஹமட் ஹசன் சூஃபி, எனும் நான்கு ஆண் பிள்ளைகலும், பத்திமா ஹச்னா, பாத்திமா சூஃபியா எனும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு புறமிருக்க சமூகத்தின் உயிர்களும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை அடிப்படை குறிக்கோலாக வைத்து சிறீலங்கா முஸ்லிம் கங்கிரஸை பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பித்து அதன் ஆரம்ப தவிசாளராகவும் பதவி வகுத்து 1988ம் ஆண்டு இடம் பெற்ற இணைந்த வடகிழக்கு மாகான சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதன் பலனாக அம்பாரையில் 9 பேரும், மட்டக்களப்பில் 3 பேரும் திருமலையில் 5 பேருமாக மொத்தம் 17 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் அம்பாறையில் அதிகூடிய விருப்பு வாக்குகளை நிஜாமுதீன்(முன்னாள் பிரதி அமைச்சர்) பெற்றார். அடுத்து அதாவுல்லா (முன்னாள் அமைச்சர்), அலி உதுமான், பதுருத்தீன், ஹஸன் அலி (மு.கா செயலாளர் நாயகம்), முனாஸ் காரியப்பர், மர்ஹூம் எம்.வை.எம். மன்சூர், ஏ.எல். அப்துல் மஜீட் (முழக்கம்), எம்.எம். ஆதம்பாவா ஆகியோரும், மட்டு மாவட்டத்தில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா (முன்னாள்பிரதி அமைச்சர்), முஹைதீன் அப்துல் காதர் (முன்னாள் பிரதி அமைச்சர்), றூமி முஹைதீன் ஆகியோரும் திருமலை மாவட்டத்தல் ஜவாத் மரைக்கார், ஜமால்தீன், மஃறூஃப் மூவரும் தெரிவு செய்யப்பட்டனர். அதே மாகாண சபையில் சேகு இஸ்ஸடீன் விடுதலைப் புலிகளின் அச்சுருத்தல்களுக்கும் மத்தியில் எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்தமையினை பார்க்கும் போது பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்களும், முஸ்லிம் காங்கிரசும் அவருக்கு கொடுத்திருந்த முன்னுரிமையினை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைகின்றது.
இது சம்பந்தமான உண்மை நிலையினையும், அவருடைய தற்போதைய ஆண்மீகம் சம்பந்தமான சுவாரஸ்மான வாழ்க்கையை பற்றியும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் வாழும் இடத்துக்குச் சென்று ஏன் அவர் இந்த வாழ்க்கையை தெரிவு செய்துள்ளர், மீண்டும் எதிர்கால அரசியலில் ஈடுபடும் நாட்டம் உள்ளதா?, சமாகால அரசியலைப் பற்றி எவ்வறான கருத்துடன் காணப்படுகின்றார் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்ட பொழுது எமது நாளிதலுக்காக அவர் தந்த பதில்கள் பின்வருமாறு.....
அஹமட் இர்ஸாட் :- இவ்வாறான ஆன்மீக அமைதி நிலை வாழ்கையினை தேடி வந்துள்ளமைக்கான காரணம் என்ன?
சேகு இஸ்ஸடீன் :-நான் பெரும் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃப் அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்த போது இருந்த கட்சி அல்ல இப்போது இருப்பது. நிறைவேற்று அதிகரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றுவதை குறிக்கோளாக கொண்டு நாங்கள் ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃப் அவர்கள் 1992ம் ஆண்டு அட்டாளச்சேனை கல்வியியற் கல்லூரியில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அதிமேதகு பிரேமதாசதான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என முஸ்லிகள் சார்பாகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும், அவருடைய தனிப்பட்ட கருத்தாகவும் உரையாற்றினர். ஆனால் முஸ்லிம் காங்கிரசானது நிறைவேற்று அதிகரம் கொண்ட ஜனதிபதி முறைமைக்கு எதிரானது என்றும், அஸ்ரஃப் அவர்கள் தெரிவித்த கருத்தானது தனிப்பட்ட அவருடைய கருத்தென்றும், அது கட்சியின் கொள்கை அல்ல என்றும் நான் ஊடகங்களுக்கு தெரிவித்தேன். அதனால் அவர் என்னை கட்சியிலிருந்து இடை நிறுத்தினார்.
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உரிமைக்குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக அன்று அக்கறைப்பற்றில் அலி உதுமான், சம்மாந்துறையில் மாகாண சபை உறுப்பினர் மன்சூர், பேறுவளையில் அப்துர் ரஃமான் போன்றவர்களை முஸ்லிம் காங்கிரஸ் உயிர்ப்பலி கொடுத்தது. எங்களுக்கு பாதுகாப்பிறக்காக இருந்தவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் உறுவாக்கப்பட்ட இக்கட்சியானது இன்று அதிகாரத்தில் மோகம் ஏற்படத் தொடங்கி கட்சியானது திசைமாறி சென்று கொண்டிருகின்றதை பார்க்கின்ற பொழுது எனக்கு அக்கட்சி மீது மீதமாய் எஞ்சியிருந்த நம்பிக்கையும் விருப்பமும் அற்றுப்போயுள்ளது.
ஆனால் இப்போது இருக்கின்ற கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையனது மூன்று தடவைகளும் இருக்கலாம் என்பதற்காக பாரளுமன்றத்தில் கையை உயர்த்திய சம்பவங்களும் இருக்கின்றது. அந்த வகையில் பார்க்கப்போனால் செயலாளராக உள்ள ஹசன் அலி மட்டுமே தற்போது கட்சியின் ஆரம்ப கொள்கைவகுப்பாளர் என்ற ரீதியில் முஸ்லிம் உரிமைகள் சம்பந்தமான கருத்துக்களை எப்போதாவது வெளியிடுகின்றார். ஆனால் கட்சியில் இருக்கும் ஏனையோர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை முதலீடாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருவதனால் அவருடைய குரலும் எடுபடுவதில்லை. தற்போது இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்களின் உரிமைகள் சம்பந்தமான எந்தவொரு அடிப்படை கொள்கையும் கிடையாது.
அரசாங்கத்தில் இருந்து கொண்டும் எதற்கும் பிரயோசனம் அற்றதாக காணப்பட்ட நீதி அமைச்சுப்பதவியை வகித்து சுகபோக வாழ்க்கையினை அனுபவித்து கொண்டிருந்தவர்கள் முஸ்லிம்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ அல்லது பேறுவளையில் பொதுபலசேனா கட்டவிழ்த்து விட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபடவில்லை. தபால் முல வாக்களிப்பு வரைக்கும் அரசாங்கத்துடன் இருந்து கொண்டு எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மாறாக ரிசாட் அமைச்சர் பதுர்டீனுக்கு ரங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற முறுகள் நிலை காரணமாக அமைச்சர் ரிசாட் பதுர்டீன் வெளியேறியதனால் முஸ்லிம் காங்கிரசுக்கான மக்கள் ஆதரவு குறைந்து விடலாம் என்ற பயத்தினாலேயே வெளியேறினார்கள் இதுதான் உண்மையாக நடந்தவை..
ஆகவே தேர்தல் கேட்காமலே பாராளுமன்றம் சென்று ஊடக பிரதி அமைச்சராகவும், பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராகவும்இ சிறு கைத்தொழில் உதவி அமைச்சராகவும், ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகிப்பதற்கான எல்லா வகையான சந்தர்பங்களையும் அல்லாஹ் எனக்கு வளங்கியுள்ளான். இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலைமையினை பார்க்கும் போது.,அதனுடைய கொள்கை பற்றியும், அதனுடைய யாப்பில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைமைக்கோ உறுப்பினர்களுக்கோ அல்லது அடிமட்ட போராலிகளுக்கோ தெரிந்த விடயமாக இல்லை. ஆகவே நான் யார்? எதற்கு இந்த உலகத்தில் பிறந்தேன் என்ற கேள்விகளுக்கு ஆத்மீக ரீதியாக விடை காண்பதே எனது குறிக்கோளாக இருக்கின்ற அதே சமயம். நான் முஸ்லிம் சமூகத்துக்காக விசுவாசமாக இருந்துள்ள படியினால் என்னுடைய உள்ளத்தில் சேறு பூசிக்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் அல்லாஹ்வே என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளான்.
அஹமட் இர்ஸாட்:-1988ம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் என்றடிப்படையில் தற்போதைய கிழக்கு மாகாண சபையினை எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
செகு இஸ்ஸடீன்:- நான் எந்த கோணத்திலும் பார்க்கவில்லை. நேரடியாகவே அதை பார்க்கின்றேன். மண்ணினால் சோறு சமைத்து விட்டு அச்சோற்றில் மண் இருக்கின்றதா என்று தேடும் அவசியம் கிடையாது இருப்பது எல்லாமே குப்பைகள்தான். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடாத கட்சியான முஸ்லிம் காங்கிரசானது அவர்களுடைய வியாபாரத்தினை செய்து கொண்டிருக்கின்றனர். இப்பொழுது தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து வியாபாரத்தை செய்து கொண்டிருக்கின்றனர். எந்த உரிமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கட்சிகளை அழைத்து கூட்டாக ஆட்ச்சி அமைத்திருகின்றது? தழிழர்களின் உரிமைகளுக்காக பதவிகளை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த தமிழ் கட்சிகள் எதற்காக இப்போது கொள்கையை புறம்தள்ளிவைத்து விட்டு முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து அமைச்சுப்பதவிகளை எடுத்திருக்கின்றனர். எல்லாமே வியாபாரம்தான்.
அஹமட் இர்ஸாட்:- எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கும் திட்டங்கள் இருக்கின்றதா அல்லது இந்த அமைதியை தேடிய வாழ்க்கையுடனே வாழப்போகின்றீர்களா?
சேகு இஸ்ஸடீன்:- நீங்கள் இரண்டாவதாக கூறிய விடயம்தான் நான் தொடர்ந்து பின்பற்றப் போகும் தீர்மானமாமும். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமாயின் அந்த நேரத்தில் எனக்கு எது தோன்றுகின்றோ அதை நான் எனது சமூகத்துக்க்காக செய்வேன். அந்தவகையில் மாங்காய் பால் உண்டு மலை மேல் இருப்போருக்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி. குதம்பாய்!, தேங்காய் பால் ஏதுக்கடி!. இஸ்லாமிய வரலாற்றில் மலைமேல் கால் படாத நபிமார்கள் ஒருவரும் கிடையாது என்ற வகையில் மாங்காய் என்பது இதயமாகும். இதயத்தில் வடிந்தோடுகின்ற ஞானப்பால் குடிப்பவர்களுக்கு தேங்காய் பாலினால் சமைக்கப்பட்ட கறியும் சோறும் எதுக்கடி என்பதே இதன் பொருளாகும் என்பதை விளக்கியதோடு எனது சமூகத்துக்காக என்னால் முடிந்த பங்களிப்பினையும் எனது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் இங்கிருந்தவாறே வெளியிட்டுக் கொண்டிடுப்பேன்.
எனது கருத்து:- சேகு இஸ்ஸடீன் யார்? அவர் எதனை சமூகத்துக்கு செய்துள்ளார்? முஸ்லிம் காங்கிரசில் இருந்து அவர் வெளியேறிதற்குப் பிற்பாடு பெரும் தலைவரையே விமர்சித்தவர். முஸ்லிம் காங்கிரசை இன்று வரைக்கும் விமர்சித்துக் கொண்டிருப்பவர் என பரவலான குற்றச்சாட்டுக்களும் பல கேள்விகளும் சமூகத்தின் மத்தியில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்டவர்களின் கருத்தாகவும் காணக்கூடியதாக இருந்தாலும் 1990ம் ஆண்டு யுத்தம் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் ஏராவூர், காத்தான்குடி பள்ளிவாயல், அளிஞ்சிப்பொத்தானை எனும் ஊர்களில் முஸ்லிம் கொல்லப்பட்டு இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசாவுடன் கலந்துரையாடி ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞ்சர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளிக்கப்பட்டு ஊர்காவற்படை எனும் ஓர் இளைஞர் அணியினை பாதுகாப்பு சிவில் நிருவாகத்துடன் இணைத்து முஸ்லிம் எல்லைக் கிராமங்களை பாதுகாத்தன் பலனாக இன்று முஸ்லிம் சமூகம் கிழக்கு மாகாணத்தில் தலை நிமிர்ந்து வாழ்கின்றதென்றால். அப்பெருமைக்கு சொந்தக்காரன் முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.
நேர்காணல்-ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-