ஏராவூர் ஓட்டுப்பள்ளி மீரா ஜும்மா பள்ளிவாயலில் முதலமைச்சருக்காக துவா பிரார்த்தனை-வீடியோ இணைப்பு

அஹமட் இர்ஸாட்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் சொந்த ஊரான ஏராவூர் மூன்றம் குறிச்சியில் அமைந்துள்ள மிக நீண்ட வரலாற்றினை கொண்ட ஓட்டுப்பள்ளி மீரா ஜும்மா பள்ளிவாயலில் முதலமைச்சரை வரவேற்றும், அன்னாரின் சுக வாழ்வுக்காகவும், அவருடைய எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வேண்டிய துவா பிரார்த்தனையும் நேற்று 10..03.2015 செவ்வாய்க் கிழமை 8.30 மணியளவில் இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் குறித்த பள்ளிவாயலுக்காகான மேல் மாடி கட்டத்தினை முடித்துத் தறுமாறு முதலமைச்சரிடன் பள்ளிவாயலின் நம்பிக்கை சபைத் தலைவர் குறித்த பள்ளிவாயல் மகல்லாவில் அங்கம் வகிக்கின்ற மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். இவ்வைபவத்தில் தான் ஹபிஸ் என்பதனை ஞாபகப்படுத்தும் முகமாக குர்ஆன் வசனங்களுடன் உரையாற்றத் தொடங்கிய முதலமைச்சர், தான் அரசியலுக்கு அப்பாற் பட்டு இப்பள்ளிவாயலை கட்டி முடிப்பதற்கு உதவுவதானது எனது கடமை என்றும், அதனை தான் நிச்சயம் நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். 

இவ் வைபவத்தில் பள்ளிவாயலை அண்டி வாழ்கின்ற பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கான துவா பிரார்த்தனையில் ஈடுபட்டதனை காணக்கூடியதாக இருந்தது.




வீடியோ- முதலமைச்சருக்கான ஓட்டுப்பள்ளி துவா பிராத்தனை:-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -