புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை ஜனாதிபதி சந்தித்தார்!

பொதுநலவாய தினத்தில் கலந்து கொண்டதோடு பல்வேறு ராஜாங்கப் பணிகள் நிமித்தம் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் இரவு ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை சமூகத்துடனான பிரத்யேக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

சுமார் 250 விசேட அழைப்பின் பேரிலான மக்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு லண்டன், லன்கஸ்டர் ஹோட்டலில் நேற்று மாலை ஐக்கிய இராச்சிய நேரம் மாலை 7மணியளவில் ஆரம்பமானது.

வழமை போன்று மிகவும் எளிமையாக ஆரவாரமின்றி அங்கு வருகை தந்த ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலியும் கலந்து கொண்டிருந்தனர். 

அதற்கு முன்னராக சமயத் தலைவர்களை பிரத்யேகமாக சந்தித்திருந்த ஜனாதிபதி இச்சந்திப்பையும் மிகவும் சுருக்கமாக தனது பேச்சுடன் நிறைவு செய்திருந்தார். 

தனதுரையின் போது; புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் பங்களிப்பைக் கோரியது மாத்திரமன்றி இலங்கை மக்கள் சிங்கள, முஸ்லிம், தமிழ் என்ற பாகுபாடின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றிணைந்து கை கொடுக்க வேண்டும் எனவும் அதனாலேயே அனைத்து சமூகத்தவரும் இங்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் சுமார் 30 முஸ்லிம்கள்,40 தமிழ் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்த அதேவேளை ஜனாதிபதியின் உரை ஐக்கிய இராச்சிய தூதராலய ஒருங்கிணைப்பாளர் யோகநாதனால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் சுருக்கமான உரையுடன் நிறைவு பெற்ற நிகழ்வின் இறுதியில் அங்கு வந்திருந்தோர் ஜனாதிபதியை வாழ்த்தி நேரடியாக உரையாடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -