மகிந்தவின் ஊழல்கள் குறித்த விசாரணைக்கு மாத்திரமே சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும்!

கிந்த ராஜபக்ச மேற்கொண்ட ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கு மாத்திரமே சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் இலங்கை மீதான யுத்தக்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியாகிய பின்னரே உள்நாட்டில் அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பான உள்நாட்டு பொறிமுறைகள் உருவாக்கப்படும். 

செப்டம்பர் மாதம் சர்வதேச யுத்தக்குற்ற அறிக்கை வெளியாக்கப்படும் போது, அதில் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றவர்களுக்கு எதிராக உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -