பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல்வேறு கஷ்டங்களோடு மீள் குடியேறி வாழ்ந்து வருகின்ற ஏழை முஸ்லிம் விவசாயிகளுக்கும், தமிழ் குடும்பங்கள் சிலருக்கும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் 08.03.2015 கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் ,இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்கத்தின் பிரதித்தலைவருமான இல்மி அஹமட் லெவ்வை வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாயலில் குடும்பத் தலைவர்களுக்கு மீள்குடியேற்ற விளிப்பூட்டல் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
அன்றையதினமே புனர்நிர்மானம் செய்யப்பட்ட முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலை மீள்குடியேற்ற மக்கள் நன்றியோடும் மகிழ்ச்சியோடும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலின் தலைவர் எம்.எஸ்.ஆதம் லெவ்வை தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொருளாளர் எம்.எம்.எம்.தாஹிர் உதவித்தவைர் மௌலவி எம்.எச். பைறூஸ் (பலாஹி) உட்பட இருநூறுவில் பள்ளிவாயலின் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.