எஸ்.எல்.எம்.முஸம்மில்-
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று முஸ்லீம்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கட்டாரில் இருந்து உம்றா பயணம் மேற் கொள்ள உள்ளவர்கள் தத்தமது சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறியும் பயணம் செய்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் பல வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
விபத்துக்களை தவிர்ப்பதற்கும் மேலதிக வாகன நெரிசல்களை குறைப்பதற்காகவுமே இந்தத் தடை என கட்டார் அரசு அறிவித்துள்ளது.
கட்டார் வாழ் உறவுகள் புனித மக்கமா நகரம் சென்று உம்றா கடமையை நிறை வேற்ற எண்ணியுள்ளவர்கள் அதற்காக இயங்கும் முகவர்களிடம் சென்று அதற்காக ஆசனங்களைப் பதிவு செய்து புனித உம்றா கடமையை நிறை வேற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான செய்தி, நாட்டிலிருந்து விசிட் விசாவில் உறவுகளை அழைத்து வந்து கட்டாரில் இருந்தவாறே உம்றா கடமைக்குச் செல்லுவது வழக்கமாக இருந்து வந்ததாகும்.
ஆனால் அவ்வாறு செய்வதையும் நாட்டிலிருந்து விசிட் விசாவில் கட்டார் வந்து கட்டாரிலிருந்து உம்றா செல்ல முடியாதவாறு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்டாரிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.