மோடியின் விஜயத்தை முன்னிட்டு மூடப்படும் வீதிகளின் விபரம்!






ந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையம் முதல் கொழும்பு நகர்வரையில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

மேல் மாகாணத்திலுள்ள சுமார் 100 பொலிஸ் நிலையங்களிலிருந்தும் போக்கு வரத்து பொலிஸார் உட்பட பாதுகாப்பு கடமைகளுக்காக 1000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக விசேட பிரமுகர் பாதுகாப்பு பிரிவினரும் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளனர். 

நாளை 13ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 6.30 மணி வரையில் விமான நிலையத்திலிருந்து அதி வேக நெடுஞ்சாலை, புதிய களனி பாலம், பேஸ்லைன் வீதி பொரளை, டி.எஸ்.சந்தி மற்றும் ஹோர்டன் பிளேஸ், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை லிபர்டி சுற்று வட்டம், சென்ட்மைக்கல் சுற்று வட்டம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் வரையும் வாகன போக்கு வரத்து கட்டுப்படுத்தப்படும். 

இதே போன்று காலை 9.15 முதல் 9.45 மணி வரையில் காலி முகத்திடலுக்கு முன்பாகவுள்ள வீதியில் போக்கு வரத்து மட்டுப்படுத்தப்படும். காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரையில் காலி முகத்திடல் வீதி, காலி வீதி, செரமிக் சந்தி, ரீகல் சுற்று வட்டம், டி.ஆர்.விஜயவர்தனாவீதி, காமினி ஹோல் சுற்று வட்டம், மருதானை சந்தி, மாளிகாகந்த வீதி ஊடாக மகாபோதி விகாரை வரையிலும் போக்கு வரத்து மட்டுப்படுத்தப்படும். 

மேலும் அதே தினம் பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரை காலி வீதி, காலி முகத்திடல் வீதி, கொள்ளுப்பிட்டி தர்மபால மாவத்த, லிபர்டி சுற்று வட்டம், பித்தளை சந்தி, ரெற்குரொஸ் சந்தி, பொது நூலக சுற்று வட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ஹோர்டன் பிளேஸ், காஸல் வீதி ஊடாக பத்தரமுல்ல, பொல்தூவ பாராளுமன்றத்துக்கு திரும்பும் சுற்று வட்டம் வரை வாகன போக்கு வரத்து மட்டுப்படுத்தப்படும். 

இதே போன்று பிற்பகல் 2.45 மணி முதல் 3.00 மணி வரையிலும் பொல்தூவ வீதி, ஜெயவர்தனபுர பாராளுமன்றம் வரையிலும் மாலை 4.45 முதல் 5.15 வரையில் காலி முகத்திடல் முன்பாகவுள்ள வீதியும் இரவு 7.45 முதல் 8.00 மணி வரை காலி முகத்திடல் வீதி, காலி வீதி, ஜனாதிபதி மாவத்தை ஊடாக ஜனாதிபதி மாளிகை வரையிலும் உள்ள வீதிகளும் போக்கு வரத்துக்கு மட்டுப்படுத்தப்படும். 

நாளை மறுதினம் 14ஆம் திகதி காலை 8.15 முதல் 8.45 மணி வரையிலும் மாலை 3.15 முதல் மாலை 4.30 மணி வரையிலும் காலி முகத்திடல் வீதி என்.எஸ்.ஏ. சுற்று வட்டம், லோடஸ்வீதி, செரமிக்சந்தி, ரீகல் சுற்றுவட்டம், சித்தம்பலம் ஏ.கார்டினர் மாவத்த, கொம்பனித்தெரு ஊடாக பொலிஸ் தலைமையக சுற்று வட்டம் வரையிலும் உள்ள வீதிகளும் மாலை 6.15 மணி முதல் மாலை 6.45 மணி வரையிலும் காலி முகத்திடல் வீதி, காலிவீதி, கொள்ளுப்பிட்டி, தர்மபாலமாவத்த, லிபர்டி சுற்று வட்டம், ஆர்.ஏ.த.மெல் மாவத்த, அர்ஸ்டன் வீதி ஊடாக இந்தியன் ஹவுஸ் வரையிலான வீதிகளும் போக்கு வரத்து மட்டுப்படுத் தப்படும். 

நாளை மறுதினம் 14ஆம் திகதி இரவு பிரதமர் மோடி தனது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். இரவு 8.15 மணிமுதல் இரவு 9.00 மணி வரையில் இந்தியன் ஹவுஸிலிருந்து தர்ஸ்டன் வீதி, கே.ஒ.ஸி.சந்தி, கிலாஸ் ஹவுஸ் சந்தி, ஹோர்டன் பிளேஸ், டி.எஸ்.சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை ஒருகொடவத்த சந்தி, புதிய களனி பாலம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையூடாக விமான நிலையம் வீதிகளிலும் போக்கு வரத்து கட்டுப் படுத்தப்படும். அத்துடன் மேற் குறிப்பிட்ட நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -