அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் அமைந்துள்ள மத்ரஸத்துல் பலாஹ் பகுதிநேர ஹிப்ழ் பிரிவின் 2 வது அல் – ஹாபிழ் பட்டமளிப்பு விழா நாளை (15) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக மஸ்ஜிதுல் பலாஹ் நிர்வாகத்தின் செயலாளர் கே.எல்.எம்.முனாஸ் ஆசிரியர் தெரிவித்தார்.
மஸ்ஜிதுல் பலாஹ் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெறும் இந்த 2 வது பட்டமளிப்பு நிகழ்வு அதன் தலைவர் ஏ.எல்.எம்.தஸ்லிம் ஆசிரியர் தலைமையில் மத்ரஸதுல் பலாஹ் மண்படத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பிரதம நீதிபதி அல் – ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச மௌலவிமார்கள், ஹாபிழ்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் மஸ்ஜிதுல் பலாஹ் நிர்வாகத்தின் செயலாளர் கே.எல்.எம்.முனாஸ் ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவில் வசிக்கும் அப்துல் காதர் மற்றும் சம்சுல் சதீகா ஆகியோரின் மூன்றாவது புதல்வரான ஏ.எசி.எம்.சாஜித் என்பவருக்கு அல் – ஹாபிழ் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.