ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
அதிமேதகு ஜனதிபதி மைத்திரிபல சிறீசேனவின் சகோதரர் வனவிலங்கு அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு விளைவித்தார் என்று தெரிந்தவுடன் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டது தானே எனக் கூறியதாக ஒரு வருடத்துக்கு முன் வெளிவந்த பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேலும் அச்செய்தியில் இரு தலைவர்களின் ஆட்சிக்காலத்தில் நான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பணியாற்றியது நான் முன் ஜென்மத்தில் செய்த புன்னியமாகும்.
அதே வேலையில் இப்படியொரு தம்பி எனக்கு கிடைத்தது அதே ஜென்மத்தில் தான் செய்த பாவம் எனவும். தனது சொந்த சகோதரனாக இருந்தும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இந்த நாட்டு மக்களுக்கான செய்தியினை பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்த ஜனாதிபதியின் ஆட்சியில் வாழுவதையிட்டு நாம் ஓவ்வொருவரும் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 11வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர எழுத்தாளரும் ஆசிரியருமான இப்றா லெப்பை றிபாய் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய றிபாய் இவ்வாறு சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் எமது ஜனாதிபதியின் ஆட்சியில் நிச்சயமாக ஊடகங்களுக்கும், ஊடவியலாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், எவ்வாறான சுதந்திர உரிமையும், பேசுரிமையும், எழுத்துரிமையும், கொடுக்கப்பட வேண்டுமோ அவை அனைத்தும் அவருடைய ஆட்சியில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இந்தநாட்டில் சுபீட்ச்சமான அரசியல் கலாச்சாரத்தை உறுவாக்குவதற்கும், நிம்மதியான வாழ்கையை எல்லோரும் வாழ்வதற்கும் வழியமைத்து கொடுக்கும் முக்கிய வேலைத்திட்டமாக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து வழிவகைகளும் நிலைநாட்டப்படும் என்பதனை அதிமேதகு ஜனாதிபதியின் இந்த சம்பவத்திலிருந்து நாம் அனைவரும் விளங்கிக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அரூஸ் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 08.03.2015 காலை 11 மணியளவில் அட்டாளச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இடம் பெற்ற இப்பொதுக்கூட்டத்துக்கு பிரதம அதீதியாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கள் வடிலால் அமைப்பின் இனைப்பாளரும், சமூக சேவையாலருமான ஏ.எல். மர்ஜூன் கலந்து கொண்டதுடன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பிரதேச அமைப்பாளர் எஸ்.எம். இக்பால், மிசாரி வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் எம்.பாயிஸ், பிரதேசத்தின் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், செய்தியாலர்கள் என பலரும் பிரசனமாயிருந்தனர்.
இதன் போது பிரதம அதீதி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியமானது கடந்த காலத்தில் செய்துள்ள பணிகளை பற்றி அதன் தலைவர் எஸ்.எம்.அரூஸ் உரையாற்றிதுடன், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், மற்ரும் அவர்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் என்பனபற்றி வைபவத்துக்கு சமூகமளித்திருந்த ஏனைய ஊடகவியலாளர்கள் உரையாற்றினார்கள்.