பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியும் அதன் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் புதிய சரீஆ பிரிவுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட மேற்படி ஒலிபெருக்கி சாதனத்தை கையளிக்கும் நிகழ்வு 11-03-2015 இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது மேற்படி ஒலிபெருக்கி சாதனம் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் டி.எல்.எம்.குறைஷ் மற்றும் நிறுவனத்தின் இணைப்பாளர்களான எம்.ரீ.எம். கரீம்,பீ.ரீ.எம்.பாரூக் ஆகியோரினால் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), விரிவுரையாளர் மௌலவி எம்.பீ.எம்.பாஹீம் (பலாஹி) ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த ஒலிபெருக்கி சாதனம் 50 ஆயிரம் ரூபாய் மெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.