ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் விஷேட மாநாடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏஎம் அஹமட் லெப்பை தலைமையில் ஓட்டாமாவடி பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பிரதம கருத்துரையாளராக வருகை தந்திருந்த இம்மாநாட்டில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான என்.சிதம்பரமூர்த்தி, ஏ.எஸ் இஸ்ஸதீன் எம்.எம்.இஸ்மாலெப்பை மற்றும் எம்.ரீ.எம்.அஷ்ரப் மேலும் உதவி மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்.