பி.எம்.நிசாம்-
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னடுப்பது தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆராயும் கூட்டம் நேற்று நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் இடம் பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கஸரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபினால் முன்னடுக்கத் திட்டமிட்டிருந்த கல்முனை புதிய நகரத் திட்டத்தை அடியொற்றியதாக புதிய கல்முனை நகரத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்த வாரம் அமைச்சர் ஹக்கிம் தலைமையில் நடை பெற்றிருந்த கூட்டத்தில் முன் மொழிந்திருந்தார். இதன்படி ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைவாக புதிய கல்முனை நகரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரி்வாக ஆராயப்பட்டது. அத்துடன் மிக விரைவாக புதிய நகர அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஏதுவான காரணிகளையும் இனம் கண்டனர்.
இக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகள், திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.