உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதி வருகிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தென் ஆப்பிரிக்கா, ஆசிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோற்றது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை தோற்கடித்தது.
6 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்பிரிக்கா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று கால் இறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரவு எமிரேட்சஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பெரும் வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியின் 3 விக்கெட்களை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சு எடுத்து விட்டது. தொடக்க ஆட்டக்காரர் அம்லா 12 ரன்களில் அவுட் ஆனார். காக் 26 ரன்களிலும், ரிலீ ரோசவ் 43 ரன்களிலும் அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக நடையை கட்டியதை அடுத்து, டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் பொறுப்பாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர்.
இருவரும் தென் ஆப்பிரிக்காவை வலிமையான நிலைக்கு கொண்டு சென்றனர். தென் ஆபிரிக்கா 34 ஓவர்களுக்கு, 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் எடுத்திருந்த போது, டிவில்லியர்ஸ் 53 ரன்களுடனும் (3 பவுண்டரிகள், ஒரு சிக்சர்), மில்லர் 43 ரன்களுடனும் விளையாடினர்.
இருவரும் தங்களது நேர்த்தியான ஆட்டம் மூலம் அணிக்கு ரன் சேர்த்தனர். ஆனால் ஜோடியால் நிலையாக நின்று ஆட முடியவில்லை. மில்லர் 49 ரன்களில் அவுட் ஆனார்.
டேவிட் மில்லர் மைதானத்திற்குள் குதித்த விதம் குறித்துதான். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகிறது
4-வது விக்கெட்டாக களமிறங்கிய டேவிட் மில்லர். வீரர்கள் வழக்கமாக வரும் வழியில் வரவில்லை பாதி வரை நடந்து வந்த மில்லர், திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பவுண்டிரி எல்லையை தடுத்து இருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்தார். மில்லரின் இந்த திடீர் நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். ஏன் இப்படி குதித்தார் என்பதை பற்றியெல்லாம் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
ஆனால் ரசிகர்களோ, ஓவ்வோருவரும் ஓவ்வொரு விதமாக விமர்சித்து வருகின்றனர்.ஆனால் சிலரோ என் வழி தனி வழி என அவர் குறித்து கேலி செய்கின்றனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 341 ரன்கள் குவித்து, ஐக்கிய அரபு எமிரெட்சுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.