முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர்

அறூஸ்-

அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அதரவாளர்களுக்கு எதிராக கடந்த 20012ம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் வன்முறையின் போது இப்பகுதியில் மற்றுமொரு அரசியல் சட்சியைச் சேர்ந்த சுலைமாலெவ்வை மௌலீன் என்பவரைத் தாக்கி அவருக்கு இரும்புப் பொல்லால் அடித்துக் காயப்படுத்தி சட்ட விரோதமாக கூட்டம் கூடியதாகவும் குற்றறஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதரவாளர்களுக்கு எதிரான வழக்கு அக்கரைப்பற்று பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் மன்ற நீதிபதியுமான எச்.எம். முகம்மட் பஸீல் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவ்வழக்கின் முறைப்பாட்டுக்காரருக்கு அழைப்புக்கட்டளை அனுப்பப்பட்டிருந்தும் தொடர்ந்து நீதிமன்றுக்கு சமூகமளிக்கத் தவறியமையால் மேலும் இவ்வழக்கில் தவணை வழங்குவதை எதிராளிகளின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் ஆட்சேபித்தார்.

அன்னாரின் விண்ணப்பத்தை கருத்திற் கொண்ட நீதிபதி அவர்கள் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் எல்லோரையும் விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கி அவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.
கடந்த 05 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்நீதிமன்றில் சமூகமளித்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய ஆதரவாளர்கள் தமது சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்து இப்பொழுதுதான் நிம்மதிப் பெருமூச்சுடன் வீடுசெல்வதாக விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்தார்கள்.
வழக்கு இல: 37358
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -