சீகிரியவில் தொல்பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச் சாட்டில் கைதையுள்ள உதயசிறியை விடுதலை செய்யக் கோரி பிணைமனுத் தாக்கல்
சீகிரிய சுவரொன்றில் தனது பெயரை எழுதியமைக்காக இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் மேற்படி உதயசிறியினை பிணையில் விடுவிக்கக் கோரி பிணைமனு ஒன்றினை நேற்று (13.03.2015) தம்புள்ளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14.02.2015 அன்று சீகிரியவிற்கு சுற்றுலா சென்றிருந்த மட்டக்களப்பு, சித்தாண்டி, விநாயகர்புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற மேற்படி யுவதி அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினர் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, 02.03.2015 அன்று தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி