பொதுபல சேனா நிராகரிக்கப்பட்ட அமைப்பு: UK முஸ்லிம்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி!

இக்பால் அலி-

க்கிய இராச்சியம், இலங்கை சோனகர் சங்க ஏற்பாட்டில் கடந்த 11ம் திகதி காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான பிரத்தியேக சந்திப்பொன்று லண்டன் பாக்லேன் ஹில்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஜனாதிபதி, தற்போது ஐக்கிய இராச்சியத்துக்கான ஜனாதிபதி பிரதிநிதிகள் குழு உறுப்பினராக விஜயம் செய்திருக்கும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஜனாதிபதி செயற்குழு முக்கியஸ்தரும் முன்னாள் ஐக்கிய இராச்சியத்துக்கான பிரதித் தூதருமான திரு. அம்சா ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முக்கிய முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 

ஊடகவியலாளரும் பிரபல சமூக சேவகருமான சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எனது குழந்தைகளின் நண்பர்கள் கூட இதை எங்கள் வீட்டிலேயே வைத்து சொல்கிறார்கள். 

நிச்சயமாக இது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதே அவசியம் என தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பொது பல சேனா எனும் அமைப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய இன்னல்களின் விளைவு என்ன என்பதை தேர்தலின் முடிவு தெட்டத் தெளிவாக எடுத்தியம்பியிருக்கிறது எனவும் குறிப்பிட்ட அவர், குறித்த அமைப்பை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் எனவும் தெரிவித்ததுடன் நாட்டின் எதிர்கால திட்டங்களில் புலம் பெயர்ந்து வாழும் சமூகத்தின் பங்கு குறித்தும் தெளிவு படுத்தியிருந்தார்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஊடகவியலாளர் இர்பான் இக்பால், ஜனாதிபதி பதவியேற்றதும் ரூவாஹினியில் இடம்பெற்ற நேர்காணலில் தன்னை யாரும் அதிமேதகு ஜனாதிபதி என அழைக்க வேண்டாம் என அன்புக்கட்டளையிட்டிருந்தார். 

ஆனாலும் அதையும் தாண்டிய எங்கள் அன்பை வெளிப்படுத்த, தற்போது நல்லாட்சியை வழி நடாத்திக்கொண்டிருக்கும் திரு. மைத்ரிபால சிறிசேனவை 'மக்கள் ஜனாதிபதி' என நாம் அழைக்க விரும்புகிறோம் என வேண்டிக்கொண்டதுடன் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்குப் பொன்னாடையும் போர்த்தி கௌரவப்படுத்தியிருந்தார்.

இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் கைகளைப் பற்றிப் பிடித்து 'என் உற்ற நண்பன் அசாத் சாலி' யென பல தடவைகள் கூறியதுடன் இன்முகத்துடன் அசாத் சாலியின் பங்களிப்புகளை விளக்கி அதற்கான தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இதன் போது இலங்கை சோனகர் சங்கப் பிரதிநிதி சியாத் கபூர் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்.

நிகழ்வின் இறுதியுரையை நிகழ்த்திய எமது இணை ஆசிரியர், சட்டத்தரணி நிஸ்தார், இலங்கையெனும் நாடு அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனும் உணர்வை உருவாக்குவதுடன் தேவையேற்படின் பிறப்புச் சான்றிதழில் கூட இன அடையாளம் எனும் பகுதியை நீக்கி அனைவரும் இலங்கையர்கள் எனும் அடிப்படை உணர்வை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

எனவும் இந்நல்லாட்சியில் இலங்கைப் பிரஜையெனும் பொது அடிப்படையை மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதையும் ஜனாதிபதி பரிசீலிப்பதாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -