மட்டு-சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த மாமனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகர சபை மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

ஊடக துறையில் சேவையாற்றி உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் உயிர் நீத்த அனைவருக்கும் அகவணக்கத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர் சிவராமின் உருவப் படத்திற்கு வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜால் மலர் மாலை அணிவித்து, வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களால் நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோரால் சிவராமின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருள் சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனீபா, மட்டக்களப்பு கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் உட்பட பலர் நினைவுப் பேருரைகளை ஆற்றினர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, எஸ்.இராஜேஸ்பரன், வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனீபா, ஊடக சுதந்திர இயக்க அமைப்பாளர் சுனில் ஐயசேகர, மட்டக்களப்பு கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் மற்றும் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -