கல்முனையில் தீ விபத்து 12 கடைகள் சேதம்!




ல்முனை நகர கடைத்தொகுதியில் இன்று மாலை 3.45  மணியளவில் தீ பரவியுள்ளது.

கல்முனை மாநகரசபை தீயணைப்பு படையினர் தீயனைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இது சம்மந்தமாக சர்ஜூன் லாபீர்:

கோடிக்கணக்கான சொத்துகளையும்,பொருளாதார இருப்புகளையும் காப்பாற்றிய கல்முனை மாநாகர சபை தீயணைப்பு படையினருக்கும்.கல்முனை பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் நன்றிகள்.

இன்று(27.04.2015)பிற்பகல் 3.45 மணியளவில் கல்முனை சந்தையில் மின்ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினை கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

தென்கிழக்கின் முகவெற்றிலையாக கருதப்படும் கல்முனையில் மிக பிரதான வருமானத்தை ஈட்டக்கூடிய கல்முனை சந்தையின் ஒரு பகுதி மின்ஒழுக்கு காரணமாக இன்று தீப்பற்றி எரிந்தது.

குறித்த நேரத்தில் தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயை அணைக்காது விட்டு இருந்தால் முழு சந்தையும் எரிந்து நாசமாகியிருக்கும்.

குறித்த நேரத்தில் பொலிசாரின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிககூடுதலாக இருந்தது.

இந்த தீ விபத்து இரவு நேரங்களில் ஏற்பட்டு இருந்தாலும் அதனையும் தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்த 24மணித்தியாலம் இயங்க கூடியவகையில் மக்கள் மயப்படுத்தி மக்கள் சேவைகளை திறன்பட செய்தால் இன்னும் இன்னும் நன்றாக இருக்கும் உங்கள் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -