இவ்வாண்டில் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்- ரோசி சேனாநாயகக்க

அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில் மட்டும் 2014ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2160 சிறுவர்கள் தாக்குதலுக்காகி சித்திரவதை செய்த சம்பவங்களும் சிறுவர் பாதுகபாப்பு அதிகார சபையின் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது. என இன்று சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயகக்க இன்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார். 

2015 ஏப்ரல் 30ஆம் திகதியை நாடு முழுவதிலும் சிறுவர்களது பாலியல் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம். என்ற திட்டத்தில் சிறுவர் விவகார அமைச்சும் யுனஸ்கோ நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை இலங்கை உள்ள சகல சமுகத்திற்கும் விழிப்பூட்டும் முகமாக பெருவிரல் ஒப்பமிட்டு இந் திட்த்தினை ஆரம்பித்து வைத்தனர்.

இத்திட்டத்திற்காக சிறுவர்கள் சம்பந்தமாக கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, ஊடக அமைச்சு சிறுவர் பாதுகாப்பு அமைச்சு நீதி அமைச்சு ஆகியன இணைந்து யுனஸ்கோ நிறுவனமும் இத்திட்டத்தினை அமுல்படுத்;துகின்றன. இத்திட்டம் சம்பந்தமாக ஊடகங்கள் ஊடகாவும், பாடசாலை ஊடகாவும் வீதி நாட்டியம், ஓவியம், கட்டுரை, மேடை நாடகங்கள் ஊடாக விழிப்பூட்டு சிறுவகளுக்கு இழைக்கும் இம்சைகள், சித்திரவதை, தாக்குதல்கள் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதே இத் திட்டத்தின் நோக்கம் என சிறுவர் சம்பந்தமான அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -