சிஹல ராவய தேரர் உட்பட 17பேருக்கு பிணை!

குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற்றும் 17 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

பலாங்கொட நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. 

நீதிமன்ற உத்தரவை மதிக்காது குறித்த நபர்கள் குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக பலாங்கொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இன்று நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களை 2 லட்சத்து 50,000 பெறுமதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -