19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மைத்திரி அரசின் நூறு நாள் திட்டத்தில் அடங்கிய 19 ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் விவாதிக்கப்பட்டு - திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். 7 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.