19ஆவது திருத்தச் சட்டமூலத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல் அமைப்பு சபைக்கு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அப்படி செய்தால் அது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும் மீண்டும் 18ஆவது திருத்தம் செயற்படுத்தப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ஜியோப்ரி அழகரட்ணம் மற்றும் செயலாளர் அஜித் பிரசன்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் 19வது திருத்தத்தின் மூலம் இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனங்களில் நியாயநிலை பின்பற்றப்படும் நிலை தோன்றியுள்ளது.
இது இலங்கையின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதிக்கும். அத்துடன் பாராளுமன்றத்தின் நம்பகத் தன்மையையும் கேள்விக்குரியாக்கும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு இடமளிக்காது 19வது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.(ந)